அனைவருக்கும் மகா சிவ ராத்திரி நல் வாழ்த்துக்கள் !!! சிவபெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது . சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் கூறுகின்றார்.மா சி மாதத்து கிருஷ்ண பட்ச சதுர்த்தசியில் மஹா சிவராத்திரி இடம்பெறும். மஹா சிவராத்திரி மிகவும் மகிமை நிரம்பிய நாள். இந்த சிவராத்திரியை அடைக்கலம் அளித்த இரவு என்றும் சொல்வார்கள், ஒரு சமயம் தேவர்களும் அசுரர்களும் பாற்கடல் கடைய அதிலிருந்து மஹாலட்சுமி தோன்றினாள். பின்னர் அதிலிருந்து பல பொருட்கள் வந்து கொண்டிருந்தன. கடைசியில் மத்தாக இருந்த வாசுகி என்ற பாம்பு விஷம் கக்க, அத்துடன் பாற்கடலின் நஞ்சும் சேர ஆலகால விஷம் ஆகி எல்லோரும் மயக்கமடைய ஆரம்பித்தனர். சிவபெருமன் இந்த நிலையைப் புரிந்துக் கொண்டு சுந்தரர் என்ற சிவத்தொண்டரை அந்த விஷம் எடுத்து வரும்படி தூது அனுப்பினார், தொண்டர் சுந்தரரும் அதை எடுத்து வந்தார் அதனால் அவர் பெயரும் ஆலால் சுந்தரர் என்று ஆயிற்று, அந்தக் கடுமையான விஷமான ஆலாலத்தை சிவன் விழுங்க பார்வதி தேவி மனம் கலங்கி விஷம் கீழே இறங்காமல் இருக்க அவர் கழுத்தைப் பிடிக்க அந்த இடம் நீலமாக சிவன் நீல கண்டன் ஆனார் கண்டம் என்றால் கழுத்து என்று அர்ததம். சிவன் களைப்பாகஇருப்பத ு போல் படுத்துக் கொண்டார். பார்வதியும் மற்ற பேர்களும் இரவு முழுவதும் தூங்காமல் சிவ பெருமானைக் கவனித்துக் கொண்டார்கள்.எல் லா உயிர்களையும் காக்க சிவன ஆலாலத்தைச் சாப்பிட்ட நாள் இந்த சிவராத்திரி. இப் புண்ணிய தினத்திலே உபவாசமிருத்தல், சிவாலய தரிசனம் செய்தல், சிவ தோத்திரங்கள் பாடல், சிவ மந்திரங்கள் செபித்தல், இரவு சிவ சிந்தனையுடன் கண் விழித்தல் ஆகிய கருமங்களைச் சிரத்தையோடு செய்தல் மிகப் புண்ணியம் வாய்ந்ததாகும். இவ்விரதத்தை சிவாலயத்தில் அனுஷ்டித்தல் சாலச் சிறந்ததாகும். சிவராத்திரி விரத முறை : சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்ற ு உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந் து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும ் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

 

நன்றி

அரங்கேஸ்வரம் மஹா தேவர் ஆலயம்

Advertisement